பிரியங்கா சர்ச்சைக்கு பாவனா வைத்த முற்றுப்புள்ளி
செப் 17, 2024
Advertisement
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வீஜே மணிமேகலை விலகியிருப்பது சின்னத்திரையில் பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. பிரியங்காவுக்கு எதிரான அவரது பதிவை பல பிரபலங்கள் ஆதரித்த நிலையில், ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு பல விதமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அதில், சிலர் பிரியங்காவால் பாதிகப்பட்டவர் மணிமேகலை மட்டும் இல்லையென்றும் முன்னதாக ஜாக்குலின், பாவனா போன்றவர்கள் கூட பிரியங்காவால் தான் விஜய் டிவியை விட்டு விலகினார்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து பாவனாவே ஒரு முறை பதிவிட்டுள்ளதாக சில தகவல்களை பகிர, அதை பார்த்த பாவனா, "நான் அப்படி எதுவும் கூறவில்லை. அப்படி நான் பேசியதாக சொன்ன வீடியோவை காட்டுங்கள். நான் சூப்பர் சிங்கரை விட்டு வெளியேற காரணம், எல்லையை தாண்டி சாதிக்க வேண்டும் என்பதற்காகவும், மும்பையில் எனது கணவருடனேயே சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகவும் மட்டும் தான்" என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!