
மீண்டும் ரோஜா : பிரியங்கா நல்காரி தெலுங்கில் ரீ-என்ட்ரியா?
ஆக 24, 2023
Advertisement
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் திடீரென காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவருக்கு நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்பது போல் அறிவித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், தற்போது ஆந்திரா மாநிலத்தின் கிராமத்து பெண் போல் கெட்டப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா, "ரோஸ் இஸ் பேக்", "ரீ-என்ட்ரி இன் தெலுங்கு" என சில ஹேஷ்டேக்குகளையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!