ஹிட் சீரியலை விட்டு விலகிய ப்ரீத்தி குமார்
ஜூன் 11, 2022
Advertisement
"வானத்தைப் போல" தொடருக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடரில் முதன் முதலில் ஹீரோ மற்றும் தங்கை ரோலில் நடித்து வந்த தமன் குமார், ஸ்வேதா கெல்கே திடீரென அடுத்தடுத்து சீரியலை விட்டு விலகினர். தற்போது அந்த ரோல்களில் ஸ்ரீகுமார் மற்றும் மான்யா நடித்து வருகின்றனர். ஹீரோ சின்னராசுவின் திருமணத்தை வைத்து சீரியல் டிஆர்பியும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பொன்னி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ப்ரீத்தி குமார் சீரியலை விட்டு விலகியுள்ளார். இத்துடன் இந்த சீரியலில் நடித்த மூன்று முக்கிய நடிகர்கள் சீரியலை விட்டு வெளியேறி விட்டனர். அவர் விலகியதற்கான காரணம் சரிவர தெரியாத நிலையில், சாந்தினி பிரகாஷ் இனி பொன்னியாக தொடர்வார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
சாந்தினி பிரகாஷூம் நல்ல நடிகை தான் ஆனால், பொன்னி கேரக்டருக்கு ப்ரீத்தி குமார் நல்ல பொருத்தமாக இருந்தார் என சீரியல் நேயர்கள் புலம்பி வருகின்றனர். ஸ்ரீகுமார், மான்யாவை போல சாந்தினியும் கேரக்டரை பிடித்துக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!