
கனா காணும் காலங்கள் சீசன் 2வில் என்ட்ரி கொடுக்கும் ப்ரீத்தி கிருஷ்ணன்
ஏப் 22, 2023
Advertisement
கனா காணும் காலங்கள் சீசன் 1 வெற்றிக்கு பிறகு சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இர்பான், தேஜா வெங்கடேஷ், தீபிகா வெங்கடாசலம், பிராணிகா, அபெனேயா, பிரவீனா என இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான பல நட்சத்திரங்கள் இதில் நடித்து வருகின்றனர். எனவே, இளைஞர்களுக்கான பேவரைட் லிஸ்டில் இந்த தொடரும் கட்டாயம் இடம்பிடிக்கும் என்று சொல்லலாம். தற்போது திரைக்கதையில் மேலும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் நடிகை ப்ரீத்தி கிருஷ்ணனை ஒரு முக்கிய ரோலில் களமிறக்கியுள்ளனர். ப்ரீத்தி க்ருஷ்ணன் "மிஸ்ட் காதல்" வலைதொடரின் மூலம் டிரெண்டிங் ஹீரோயினாக வலம் வந்தார். பல குறும்படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அவரது என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கனா காணும் காலங்கள் சீசன் 2 கடந்த ஏப்ரல் 21ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!