
பட்டுப்புடவையில் ஜொலிக்கும் ப்ரணிகா தக்ஷூ
ஏப் 17, 2022
Advertisement
டிக் டாக் மூலம் பிரபலமானவர்களில் ப்ரணிகா தக்ஷூவும் ஒருவர். விஜய் டிவியின் சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் அடிக்கடி தோன்றி வரும் ப்ரணிகா, நடிகையாக தனது திறமையை நிரூபித்து அதிகமான ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். இதற்கிடையில் மாடலிங் துறையிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீப காலங்களில் விளம்பரத்திற்காக இன்ஸ்டாவில் ப்ரணிகா வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. அந்த வகையில் புதுமணப்பெண் போல நகைகள் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் சிலர் ப்ரணிகாவுக்கு தான் திருமணம் ஆக போகிறது என வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உண்மையில் அது பிரபலமான தங்க நகைக்கடையின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!