
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2வில் மிஸ்ஸாகும் நடிகர்கள் : ரசிகர்கள் வருத்தம்
அக் 18, 2023
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து சீசன் 2 குறித்த செய்திகள் கசியவே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், சீசன் 2 விற்கான புரோமோ அண்மையில் வெளியாகி உள்ளது. ஆனால், இதில் ஸ்டாலின் முத்துவை தவிர அனைவரும் புதிதாக என்ட்ரி கொடுத்துள்ளனர். குறிப்பாக சுஜிதா, குமரன் தங்கராஜன் போன்ற மக்களுக்கு மிகவும் பேவரைட்டான நடிகர்கள் யாரும் இந்த சீசனில் இடம்பெறவில்லை. எனவே, இது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 வில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, வீஜே கதிர்வேல், வசந்த் வசி, ஆகாஷ் பிரேம்குமார், சத்ய சாய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!