
கர்ப்பமாய் இருப்பதை அறிவித்த நிஹாரிகா
பிப் 26, 2024
Advertisement
சின்னத்திரை நடிகையான நிஹாரிகா, ராஜா ராணி 2, வித்யா நம்பர் 1, வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் ரன்னர் பட்டத்தையும் வென்றார். இயக்குநர் ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்ட நிஹாரிகா அடிக்கடி கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வயிற்றில் குழந்தை இருப்பது போல் ஒரு ஸ்கேன் புகைப்படத்தை எடிட் செய்து நாங்கள் மூவர் ஆகப்போகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரஞ்சித் - நிஹாரிகா தம்பதியினருக்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!