புதிய தொடர் பவித்ரா : நவ., 4ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
நவ 02, 2024
Advertisement
கலைஞர் டி.வி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த "கண்ணெதிரே தோன்றினாள்" தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வருகிற திங்கள் முதல் (4ம்தேதி) "பவித்ரா" என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் சிறப்பு எபிசோட்டுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்து நடிக்கும் முதல் தொடர். அவரது ஜோடியாக பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார். பிரபல தொழிலதிபர் ரமா தேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணா, சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணம் முடித்து கொடுக்க ரமா தேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை, பவானி திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு குடும்பத்திலும், காதலிலும் என்ன நடக்கிறது. ஜோதியின் நிலை என்ன என்பது தான் தொடரின் கதை.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!