
நவீன் - கண்மணி திருமணம் வைபவம் : குவியும் வாழ்த்துகள்
ஜூன் 11, 2022
Advertisement
செய்தி வாசிப்பாளர் கண்மணி மற்றும் சீரியல் நடிகர் நவீன் தங்களது திருமணம் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதையும் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ கண்மணிக்கும் நவீனுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். நவீன் - கண்மணியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் செலிபிரேட்டிகள் உட்பட ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!