சீரியலில் ரீ-என்ட்ரியாகும் மவுனிகா!
ஏப் 02, 2023
சினிமாவில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த மவுனிகா, சின்னத்திரையிலும் பல ஹிட் சீரியல்களில் நடித்து முத்திரை பதித்தார். மவுனிகாவின் நடிப்பில், "நிம்மதி உங்கள் சாய்ஸ் -2", "சொந்தம்", "சொர்க்கம்" ஆகிய தொடர்கள் குறிப்பிடத்தக்கவை. 2009ம் ஆண்டு வரை ஆக்டிவாக நடித்து வந்த மவுனிகா அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து "ஆய்த எழுத்து" தொடரில் தான் நடிக்க வந்தார்.
அதில், காளியம்மாள் கதாபாத்திரத்தில் மிரட்டிய அவர் மீண்டும் 3 ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் "ஆஹா கல்யாணம்" தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் கோடீஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மவுனிகாவின் ரீ-எண்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!