புதுகார் வாங்கி அசத்திய மோனிஷா
செப் 04, 2023
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிஷா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சின்னத்திரை வந்தவருக்கு அந்த கனவும் நனவாகி மாவீரன் படத்திலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது கல்லூரி படிப்பிலும் கோல்டு மெடல் வாங்கி அண்மையில் பாராட்டுகளை பெற்றார்.
இந்நிலையில், மோனிஷா உழைந்து சம்பாதித்த தனது சொந்த பணத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர், "நடுத்தர குடும்பத்து பெண்ணான எனக்கு கார் வாங்குவது எல்லாம் பெரிய விஷயம். புதிய கார் வாங்குவது எப்போதும் கனவாகவே இருந்தது. இப்போது அது நடந்துவிட்டது" என குறிப்பிட்டு கார் வாங்கிய மகிழ்ச்சியான தருணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். மோனிஷாவின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பதால் ரசிகர்கள் அவர் மேன்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!