
வாலி படத்தின் முக்கிய காட்சிக்கு நோ சொன்ன அஜித் : ரகசியம் உடைத்த எதிர்நீச்சல் மாரிமுத்து
வாலி படத்தின் கதைப்படி ஹீரோயின் சிம்ரனுக்கு அண்ணன் அஜித் யார், தம்பி அஜித் யார் என்ற குழப்பம் இருக்கும். படத்தில் இதற்காக சில திரில்லிங்கான காட்சிகள் வைக்கப்பட்டது. அந்த வகையில் ஒரு காட்சியில் தொப்பியுடன் முகத்தை மறைத்து வரும் அஜித் மீசையை எடுத்திருப்பார். இருந்தாலும் அண்ணனா, தம்பியா என்ற பயத்தில் சிம்ரன் இருப்பார். அதன்பிறகு மனைவியின் குழப்பத்தை தீர்ப்பதற்காக தம்பி அஜித் மீசை எடுத்துக்கொண்டதாக விளக்கம் கூறுவார். சிம்ரனுக்கு பயம் போகும். இதை அண்ணன் அஜித்திடம் சொல்ல போகும் போது அண்ணனும் மீசை எடுத்திருப்பது போல் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், அஜித் இந்த காட்சியை கடைசியில் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். அதன்பிறகு அவர் மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானதால் மீசையை எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, அந்த காட்சி படமாக்கப்படவில்லை. இந்த காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தால் பார்ப்பவர்கள் நிச்சயமாக அதிர்ந்திருப்பார்கள் என்று அந்த பேட்டியில் மாரிமுத்து கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!