குக் வித் கோமாளி 3 புரோமோவை மிஞ்சிய மணிமேகலை ரீல்ஸ்
டிச 30, 2021
Advertisement
தமிழ்நாட்டின் நம்பர் 1 பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ரசிகர்களை மிகவும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மிக விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. நேற்று, குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ புரமோ வெளியானது. "சொல்லு சொல்லு" என தொடங்கும் இந்த புரமோ ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
இந்நிலையில் சேனலின் புரோமோவுக்கு போட்டியாக வீஜே மணிமகேலை தனது வெர்ஷனில் ஒரு புரோமோவை ரீல்ஸில் ரிலீஸ் செய்துள்ளார். அதில், தனது பிஎம்டபிள்யூ காரில் வந்திறக்கும் மணிமேகலை இரண்டு கூலிங்க்ளாஸை போட்டுக்கொண்டு கெத்தாக நடந்து செல்கிறார். இது பார்ப்பதற்கு காமெடியாக இருக்கிறது. அதன்பின் குக் வித் கோமாளி ஷூட்டிங் செட்டுக்குள் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு, ஜட்ஜூகளுடன் அவர் செய்கின்ற சேட்டையை வீடியோவாக எடுத்து அதை அழகிய புரோமோவாக எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களை இந்த வீடியோ வெகுவாக கவர்ந்துள்ளது. ஒரிஜினல் சேனல் புரோமோவை விட உங்க புரோமோ சூப்பர் என பாராட்டி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!