
சீரியலில் இருந்து விலகிய பிரபல மாளவிகா அவினாஷ்!
செப் 10, 2021
Advertisement
காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா தற்போது சீரியலிலிருந்து விலகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி தொடர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தத் தொடர் புதுமுக நடிகர்/நடிகைகளுக்கும் நிறைய வாய்ப்பை கொடுத்து அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரில் நாயகனின் அம்மாவாக சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் நடிகை மாளவிகா. இந்திய அளவில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான கே.ஜி.எப் படத்தில் ஜார்னஸ்ட் கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்த மாளவிகா, தென்னிந்திய மொழிகளில் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் நடிகையாக வலம் வருகிறார். அவரது நடிப்பில் கே.ஜி.எப் 2, ருத்ரதாண்டவம், எனிமி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. காற்றுக்கென்ன வேலி தொடரிலும் அவரது நடிப்பு பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அவர் தொடரை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சாரதா கதாபாத்தித்தில் புது நடிகை ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!