
அரசியலுக்குள் நுழைந்த லொள்ளு சபா ஜீவா!
தனது அரசியல் பிரவேசம் பற்றி கூறிய அவர், "நான் எப்படி ரஜினி ரசிகனோ, அதேபோல் அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகிருந்தே வெற்றிடம் உள்ளது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் காமராஜர் ஆட்சியை தான் உதாரணம் சொல்கிறோம். திராவிட கட்சிகளின் தலைவர்கள் கூட "அண்ணா ஆட்சி", "எம்.ஜி.ஆர் ஆட்சி" என சொல்வது இல்லை. காமராஜர் மக்கள் கட்சியை தமிழகம் முழுக்க கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் தொடங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளோம்" என கூறியுள்ளார். ஜீவா அரசியலில் நுழைந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!