
என் வாழ்க்கையை வாழவிடுங்கள் : ரச்சிதா வைரல் பதிவு
டிச 23, 2023
Advertisement
சின்னத்திரை நடிகை ரச்சிதா சக நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தொடர்ந்து இருவருக்கிமிடையே நடந்த பிரச்னையில் தற்போது இருவரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். ஒருபக்கம் ரச்சிதா விவாகரத்து பெறுவதில் மும்முரமாக உள்ளார். ஆனால், தினேஷ் தன் மனைவி கண்டிப்பாக ஒருநாள் புரிந்து கொள்வார். எனவே விவாகரத்து கொடுக்கமாட்டேன் என்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரச்சிதா, "சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்" என்று பதிவிட்டு ஸ்டோரி போட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!