குஷ்பு நடிக்கும் புது சீரியல் மீரா - படப்பிடிப்பு தொடக்கம்
பிப் 15, 2022
Advertisement
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கலக்கி வந்த நடிகை குஷ்பு, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக "லெஷ்மி ஸ்டோர்ஸ்" தொடரில் நடித்த அவர், அதன்பின் பெரிதாக சின்னத்திரையில் நடிக்கவில்லை. அரசியலில் தீவிரம் காட்டினார். இடையில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். சில சீரியல்களில் கெஸ்ட் ரோல்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில், குஷ்பு நடிக்கும் புதிய சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மீரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த தொடரை குஷ்புவே கதை எழுதி உள்ளார். இந்த தொடர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீரா தொடரின் படப்பிடிப்பு மற்றும் பூஜைக்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!