
செம்பருத்தி சீரியல் குழு கொடுத்த சப்ரைஸ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்
அக் 04, 2021
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் ஒரு காலத்தில் டிஆர்பியில் முன்னணியில் இருந்தது. இந்த தொடரில் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். ஆதி - பார்வதியின் காம்போவுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்த நிலையில் கார்த்திக் ராஜ் தொடரிலிருந்து வெளியேறினார். அதன் பின் ஆதியாக விஜே அக்னி நடித்து வருகிறார் இருப்பினும் பெரிய அளவில் ஹிட் கொடுக்க முடியாமல் சீரியல் குழு திணறி வருகிறது. அதேபோல் பார்வதியை அகிலா மருமகளாக ஏற்றுக் கொண்டால் சீரியல் முடிந்துவிடும் என்பதால் அரைத்த மாவையே அரைத்து வருவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. எனவே, செம்பருத்தி தொடரை முதல் எபிசோடில் இருந்து மீண்டும் ஒளிபரப்ப ஜீ தமிழ் சேனல் முடிவு செய்து இருக்கிறது. அதனால் ஆதியாக கார்த்திக் ராஜ் நடித்த காட்சிகளை மீண்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!