
கனா காணும் காலங்கள் தீபிகாவுக்கு நிச்சயதார்த்தம் : மாப்பிள்ளை யார் தெரியுமா?
மே 19, 2023
Advertisement
டிக்-டாக் வீடியோ மூலம் பிரபலமான தீபிகாவிற்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவர் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வருகிறார். தீபிகாவின் நண்பரான ராஜ் வெற்றி பிரபுவும் இதே தொடரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்றைய தினம் தீபிகாவுக்கும் ராஜ் வெற்றி பிரபுவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, தீபிகாவின் காதலர் ராஜ் வெற்றி பிரபு தான் என ரசிகர்கள் சந்தேகித்து வந்த நிலையில் நிச்சயதார்த்த அறிவிப்பை வெளியிட்டு தீபிகா அதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!