
பிக் பாஸ் பங்கேற்பாளர்களுக்கு விருந்து வைத்த கமல்
ஜன 17, 2024
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நட்சத்திர நிகழ்ச்சியான பிக்பாஸின் 7வது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. சின்னத்திரை நடிகை அர்ச்சனா பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த சீசனின் முடிவில் பிக் பாஸ் பங்கேற்பாளர்களுக்கு கமல் விருந்து வைத்துள்ளார். வழக்கமாக இதுபோன்ற விருந்தை கமல் நட்சத்திர விடுதியில் நடத்துவார். இந்த முறை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிக்பாஸ் வீடு இறுதிப்போட்டியின் போது அங்கு அமைக்கப்பட்ட ஈவிபி பிலிம் சிட்டியில் விருந்தளித்தார். விருந்தில் 43 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன. விருந்தின் முடிவில் அனைவரும் கமல்ஹாசனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் கமல் கலந்துரையாடினார். பின்னர் அனைவரும் பிரியா விடை பெற்றுச் சென்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!