
‛ஹிஜாப்லாம் கழட்டமாட்டேன் - இயக்குநரிடம் கண்டிஷன் போட்ட நடிகை
டிக்டாக் பிரபலமான இவரை, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தான் நடிக்க அழைத்துள்ளார். ஆடிஷனுக்கு வந்த ஜிபாவை இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்துக்கு திருச்செல்வம் ஓகே சொல்ல, நடிக்க வேண்டுமென்றால் ஹிஜாப் அணிந்து கொண்டு தான் நடிப்பேன் என ஜிபா கண்டிஷன் போட்டுள்ளார். அதற்கு திருச்செல்வமும் சம்மதிக்க பர்ஹானா கதாபாத்திரத்தில் ஜிபா நடித்து வருகிறார்.
ஜிபா சீரியலில் நடித்து வருவதை வீட்டாரிடம் சொல்லவே இல்லையாம். தந்தையின் நண்பர்கள் சீரியலை பார்த்து சொல்லிய பிறகு தான் ஜிபா சீரியலில் நடித்து வருவது அவரது வீட்டுக்கே தெரிய வந்துள்ளது. இருப்பினும் மகள் ஹிஜாப் அணிந்து கொண்டு நடிப்பதால் ஜிபாவின் தந்தையும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!