
விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன்
மே 12, 2026
Advertisement
வாணி ராணி, அழகி, பூவே உனக்காக போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அருண் ராஜன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவர் விஜய்க்கு ஆதரவாக நேரிலும் மற்றும் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பிரச்சாரம் செய்தார். சமீபத்தில் அருண் ராஜன் ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛தவெகவிற்கு ஆதரவு தெரிவித்ததால் வரவேண்டிய இரண்டு மூன்று சீரியல் வாய்ப்புகள் வராமல் போனது. நான் நடித்துக் கொண்டு இருந்த சீரியலில் எனது வாய்ப்பும் பறி போனது. நிறைய பேர் விளம்பரத்துக்காக தான் இதை எல்லாம் பண்றேன் என்றார்கள். தவெகவிற்கு ஆதரவாக பேசியதால் எனக்கு வர வேண்டிய வருமானம் வரவில்லை. அதை பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை" என தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!