
ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் அருமை எனக்கு தெரியும்; பாண்டியன் ஸ்டோர்ஸ் தீபிகா நெகிழ்ச்சி
மார் 18, 2023
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வீஜே தீபிகா தனக்கு மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் கிடைத்தது குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபிகா நடித்து வந்த போது அவர் முகத்தில் அதிக பருக்கள் இருந்ததன் காரணமாக நீக்கப்பட்டார். அதன்பிறகு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி அண்மையில் சீரியலிலிருந்து திடீரென விலகினார். இதற்கிடையில் தீபிகாவும் முகத்திற்கு ட்ரீமெண்ட் எடுத்து சில சீரியல்கள், ஷார்ட் பிலிம்கள் என நடித்து வருகிறார். எனவே, தீபிகாவையே மீண்டும் ஐஸ்வர்யாவாக நடிக்க வைத்துள்ளனர். தற்போது இழந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்த சந்தோஷத்தில் நெகிழ்ச்சியாக வீஜே தீபிகா பதிவிட்டுள்ளார். அதில், "ஒருபொருள் நம்மகிட்ட இல்லாதபோதுதான் அதோட வலி என்னனு நமக்கு புரியும். இப்போ அது திரும்ப கிடைச்சிருக்கு. அதோட அருமை எனக்கு நல்லாவே தெரியும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!