அந்த சீரியல் நான் இயக்கல : பிரவீன் பென்னட் பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி
பிப் 23, 2023
Advertisement
விஜய் டிவியில் "சரவணன் மீனாட்சி", "ராஜா ராணி" மற்றும் "பாரதி கண்ணம்மா" ஆகிய தொடர்களை இயக்கி வெற்றி பெறச் செய்தவர் இயக்குநர் பிரவீன் பென்னட். தற்போது ராஜா ராணி 2 மற்றும் பாரதி கண்ணம்மா 2 ஆகிய தொடர்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் ராஜா ராணி 2-விலிருந்து அதன் கதாநாயகி ரியா விஸ்வநாத் வெளியேறிய விவகாரம் குறித்து பரவலாக ஏதேதோ செய்திகள் பரவி வருகிறது.
இதுகுறித்து இயக்குநர் பிரவீன் பென்னட்டிடம் கேட்டபோது, "கொஞ்ச நாட்களாக நான் அந்த சீரியலை இயக்கவில்லை. அதனால் ஹீரோயின் மாறியதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.
ராஜா ராணி 2விலிருந்து ஏற்கனவே பல நடிகர்கள் விலகியுள்ளனர். தற்போது கதாநாயகி ரியாவும் வெளியேறிய சர்ச்சை தீரும் முன்னரே, இயக்குநர் பிரவீன் பென்னட்டும் விலகிவுள்ள செய்தியானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் எப்போது விலகினார்? பாரதி கண்ணம்மா இரண்டாவது சீசனுக்கும் அவர் தான் இயக்குநரா? என ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!