
மகாநதி சீரியலில் இருந்து வெளியேறிய திவ்யா கணேஷிற்கு மருத்துவமனையில் சிகிச்சை?
ஆக 10, 2024
Advertisement
பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், அவர் நடிக்கும் எந்த சீரியலிலும் முழுவதுமாக நடித்துக் கொடுக்காமல் பாதியிலேயே ஏதோ சில காரணங்களால் வெளியேறி விடுகிறார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்த திவ்யா கணேஷ், அந்த சீரியலை விட்டும் சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார். இதுகுறித்து பலரும் கேள்விகள் கேட்க, இன்ஸ்டாகிராமில் தற்போது திவ்யா கணேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், "நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சீரியல் குழுவினர் எனக்கு பதிலாக வேறு நடிகையை தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி" என கூறியுள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!