
மகாராஜா படத்தில் நடித்த ஜோதி சீரியல்களில் நடித்துள்ளாரா?
ஜூன் 19, 2024
Advertisement
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இதில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சனா நமிதாஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் படத்திலேயே அருமையாக நடித்துவிட்டதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சஞ்சனாவுக்கு கேமரா புதிதல்ல. ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சனா 6 மாத குழந்தையாக இருக்கும் போதே மெட்டி ஒலி சீரியலில் நடித்திருக்கிறார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்துள்ள சஞ்சனா, கண்ணான கண்ணே, செங்கலம் உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!