
சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகினாரா கோமதி ப்ரியா?
அக் 05, 2024
Advertisement
நடிகை கோமதி ப்ரியா ஓவியா தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது "சிறகடிக்க ஆசை" தொடரின் மூலம் புகழ் உச்சத்தை தொட்டுள்ள அவர் அந்த தொடரை விட்டு விலகியதாக பரவி வரும் செய்தியை பார்த்து ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், உண்மையில் அவர் தமிழில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடரிலிருந்து விலகவில்லை. மலையாள மொழியில் சிறகடிக்க ஆசை தொடர் செம்பனீர் பூவே என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. அதிலும் கோமதி ப்ரியா தான் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்நிலையில், அவர் செம்பனீர் பூவே தொடரிலிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் விலகுவதாக கூறியுள்ளார். அந்த செய்தி தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!