ஹோம் டூர் வீடியோவில் துப்பாக்கி : சர்ச்சைக்கு சுஜிதா விளக்கம்
ஜூலை 30, 2024
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமாகியுள்ள சுஜிதா, அண்மையில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், இரண்டு ஏர் ரைபிள் ரக துப்பாக்கிகள் காண்பிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து இணையதளங்களில் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுஜிதா தனுஷ் விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "நீலகிரி சுற்றுலா சென்றபோது என் நண்பர் வீடு மருதமலை அடிவாரத்தில் இருந்தது. அவரது வீடு அழகாக இருந்ததால் ஹோம் டூர் வீடியோ எடுக்க அனுமதி கேட்டேன். அந்த வீடியோவில் அவர்கள் வீட்டிலிருந்த தூப்பாக்கிகளுக்கு லைசன்ஸ் தேவையில்லை என்று கூறியிருந்தேன். அதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யவில்லை. வனத்துறையில் இருந்து அவர்களை எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதனால் இதெல்லாம் தேவையில்லாத வேலை" என அந்த வீடியோவில் சுஜிதா தனுஷ் விளக்கம் கூறியுள்ளார்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!