
நான்காவது முறை அறிவிப்பு : இந்த முறையாவது சரியாக வருமா டாக்சிக்
இப்படத்தை முதன் முதலில் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப் போவதாக 2023ம் ஆண்டே அறிவித்திருந்தார்கள். ஆனால், அந்த முதல் வெளியீட்டு அறிவிப்பு தள்ளிப் போனது. அதற்கடுத்து இந்த வருடம் மார்ச் 19 என அறிவித்து அதையும் தள்ளி வைத்தார்கள். அதற்கடுத்து ஜூன் 4 என மூன்றாவது முறையாக அறிவித்து அதையும் தள்ளிப் போட்டார்கள்.
தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். இந்த முறையாவது படம் சொன்னபடி வெளியாகுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
பான் இந்தியா அளவில் படத்தை வெளியிடும் போது அதனால் மற்ற படங்களின் தேதிகளையும் திட்டமிட வேண்டியுள்ளது. "டாக்சிக்" படத்தின் முந்தைய வெளியீட்டு அறிவிப்புகளால் பல படங்களின் வெளியீட்டுத் தேதியை மாற்றி வைக்க வேண்டியதானது. இந்த முறையாவது தயாரிப்பு நிறுவனம் சொன்னபடி படத்தை வெளியிட வேண்டும் என மற்ற மொழி திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!