
பிரியங்கா பதிவில் திட்டித் தீர்த்த ரசிகர்கள்
அனைவரும் எதிர்பார்த்தது போலவே "விஜய் டிவியின் செல்ல மகள்" என்று அழைக்கப்பட்ட பிரியங்காதான் "வின்னர்" ஆக தேர்வு செய்யப்பட்டார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியிலிருந்து விலகியபின் மணிமேகலை வெளியிட்ட வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைத்தது. அவருக்கான ஆதரவும் அதிகமானது. அதனால் நிகழ்ச்சியின் கோமாளிகள் மூலம் மணிமேகலைக்கு சில பதிலடியை மறைமுகமாகக் கொடுத்தனர். ஆனால், அதெல்லாம் மணிமேகலைக்கான ஆதரவைக் குறைக்கவில்லை.
இதனிடையே, தான் வெற்றி பெற்றது குறித்து உணர்வுபூர்வமான பதிவொன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார் பிரியங்கா. அதில் கமெண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
காமெடியாக கடந்த ஐந்து சீசன்களாக வலம் வந்த நிகழ்ச்சியை கலக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என அதன் ரசிகர்கள் கரித்துக் கொட்டியுள்ளார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!