
திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள்
ஆக 13, 2022
Advertisement
சின்னத்திரை நடிகையான திவ்யா கிருஷ்ணன் அடிக்கடி காமெடி செய்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வருகிறார். அவரது ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியிலும் கவனம் ஈர்த்து பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை கோலாகலமாக கொண்டாட நம் நாட்டு மக்கள் தயாராகி வருகிறார்கள். பாரத பிரதமர் மோடி அவர்களும் வீட்டுக்கு வீடு தேசியக்கொடி ஏற்றி, இந்திய நாட்டின் புகழையும், இறையான்மையும் உலகமறிய செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வகையில், இந்திய நாட்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில் திவ்யா கிருஷ்ணன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மூவர்ண தேசியக்கொடியை போல் ஜாக்கெட் அணிந்து "தாய் மண்ணே வணக்கம்" பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்துள்ளார். திவ்யாவுக்கு இந்திய நாட்டின் மீது இருக்கும் காதலையும் பற்றையும் பார்த்து அனைவரும் அவரை பாராட்டி சல்யூட் அடித்து வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!