
மல்லி சீரியலில் கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகைகள்
பிப் 07, 2024
Advertisement
தனியார் தொலைக்காட்சியில் விரைவில் மல்லி என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் மூத்த நடிகர்களான பூர்ணிமா பாக்யராஜ், நளினி, மதன்பாப் ஆகியோர் நடிக்கின்றனர். அவர்களுடன் மக்கள் மனம் கவர்ந்த "அருந்ததி" தொடரின் கதாநாயகியான நிகிதா ராஜேஷ், ரோஜா தொடரில் வில்லியாக கலக்கிய "வீஜே அக்ஷயா", சுந்தரி மற்றும் திருமகள் தொடரில் வில்லியாக நடித்திருந்த "கிரேசி தங்கவேல்", பாண்டவர் இல்லத்தில் நடித்திருந்த "கிருத்திகா அண்ணாமலை" ஆகியோர் கம்பேக் கொடுக்க உள்ளனர். மேலும் இந்த தொடரில் விமல் வெங்கடேசேன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே கமிட்டாகியிருக்கும் இந்த தொடர் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விரைவில் இந்த தொடர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக உள்ளது.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!