
தவறான தகவலை பரப்பாதீங்க : ஹாசினி வேண்டுகோள்
ஆக 15, 2024
Advertisement
சின்னத்திரை நடிகையான ஹாசினி பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் இளையராஜாவின் உறவினர் ஆவார். இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராமில் கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "நான் என்னை பற்றிய வதந்திகளுக்கு பதில் கொடுக்க விரும்புகிறேன். நான் என்னை தொடர்புகொள்ள முடியாத நாட்டிலோ, ஊரிலோ செட்டில் ஆகிவிடவில்லை. சென்னையில் தான் இருக்கிறேன். தொடர்ந்து நடிப்பு, கான்செட், வீஜே என செய்து கொண்டு தான் இருக்கிறேன். கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறேன். ஆனால், சிலர் நான் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதாக செய்தி பரப்பி வருகிறார்கள். எனவே, என்னை பற்றிய வதந்திகள் எதுவும் கேள்விப்பட்டால் என்னை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!