
குழந்தைக்காக சீரியலை விட்டு விலகும் திவ்யா ஸ்ரீதர் : செவ்வந்தியாக இனி வாத்தி
மார் 18, 2023
Advertisement
செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் டைட்டில் ரோலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு அண்மையில் அவர் நடித்த, நடித்து வரும் சீரியல் பிரபலங்கள் சேர்ந்து வளைகாப்பு நடத்தினர். அவருக்கு விரைவில் குழந்தை பிறக்க போவதால் அவர் செவ்வந்தி தொடரில் இனி தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அவருக்கு பதில் அபியும் நானும் சீரியலில் வாத்தி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ரம்யா கவுடா இனி செவ்வந்தி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் ரம்யாவும் தனது இண்ஸ்டாகிராமில் சன் டிவியில் தான் மீண்டும் நடிக்க இருப்பதை புகைப்படங்கள் வெளியிட்டு உறுதி செய்துள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!