பிரிந்து வாழ்ந்தாலும் ரச்சிதாவுக்கு வாழ்த்து சொன்ன தினேஷ்
அக் 12, 2022
சின்னத்திரை பிரபலங்களான ரச்சிதா மஹாலெட்சுமியும் தினேஷூம் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பலவருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதுகுறித்து நடிகர் தினேஷ் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார். எனினும், தங்கள் பிரிவு தற்காலிகமானது தான் எனவும் விரைவில் காலம் அனைத்தையும் சரி செய்யும் என்ற தொனியில் அதில் பேசியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்களில் தொடர் சறுக்கல்களை சந்தித்து வரும் ரச்சிதா தற்போது அதிரடியாக பிக்பாஸில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனையடுத்து தினேஷ், "பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பல ரசிகர்களின் இதயங்களை வெல்ல வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். பிரிந்து இருந்தாலும் காதல் மனைவியின் மேல் அன்பாக இருக்கும் தினேஷின் குணத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!