பிக்பாஸ் விக்ரமன் சீரியலில் நடித்துள்ளார் தெரியுமா...? - வைரலாகும் புகைப்படங்கள்
நவ 16, 2022
Advertisement
ஊடகங்களில் அரசியல் பிரிவு நெறியாளராக பிரபலமானவர் விக்ரமன். சமூகநீதி மற்றும் அரசியல் குறித்த ஆழ்ந்த அறிவு கொண்ட விக்ரமன் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ல் என்ட்ரி கொடுத்து சிறப்பாக விளையாடி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் ஒரு சில இடங்களில் அவரது நிதானமான அணுகுமுறையும், நேர்மையும் நேயர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளன.
இந்நிலையில், விக்ரமன் ஆங்கரிங் செய்வதற்கும் முன்பு சீரியல்களில் நடித்துள்ள தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் தீயாக பரவி வருகின்றன. 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "விண்ணைத்தாண்டி வருவாயா" சீரியலில் மதுமிளா, வீஜே பார்வதி, திவ்யா கணேஷ், சத்ய சாய் கிருஷ்ணா ஆகியோருடன் நடித்திருந்தார். இதில், விக்ரமனை தவிர மற்ற அனைவரும் சீரியல்களில் நடித்து பிரபலமாகிவிட்டனர். அதேபோல் மற்றொரு டிவியில் ஒளிபரப்பான "இஎம்ஐ தவணைமுறை வாழ்க்கை" என்ற நாடகத்திலும் நடிகை பாவ்னியுடன் இணைந்து விக்ரமன் நடித்துள்ளார். விக்ரமன் நடித்த அந்த தொடர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!