
ஐஸ்வர்யா ராம் சாயின் அக்கா பிரபல சீரியல் நடிகையா?
ஆக 25, 2022
Advertisement
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "பாரதிதாசன் காலனி" என்கிற தொடரில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராம் சாய். இவர் பிரபல சீரியல் நடிகை கீதாஞ்சலியின் தங்கை என்பது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் தரும் செய்தியாக உள்ளது. "நாதஸ்வரம்" சீரியலில் மஹா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான கீதாஞ்சலி, தொடர்ந்து "வாணி ராணி", "கல்யாண வீடு" மற்றும் விஜய் டிவியின் "ராஜா ராணி" தொடரிலும் நடித்து வந்தார். திருமணத்திற்கு பின் கணவருடன் துபாயில் செட்டிலாகிவிட்ட கீதாஞ்சலி நடிப்புக்கு குட் பை சொல்லிவிட்டார். தற்போது அவரது தங்கை ஐஸ்வர்யா ராம் சாய் "பாரதிதாசன் காலனி" தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார். அக்காவை பார்ப்பதற்காக துபாய் சென்றுள்ள ஐஸ்வர்யா அங்கே கீதாஞ்சலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் சகோதரிகளா? என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!