புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி : தேவயானி கண்ணீர் ஏன்?
மே 14, 2022
Advertisement
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் தொடரில் தேவயானி, வீஜே பார்வதி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவ்வப்போது கெஸ்ட் ரோலில் பிரபல நடிகர்/நடிகைகளை அழைத்து வருவது உண்டு. அந்த வகையில் தற்போது இந்த தொடரிலும் சிறப்பு தோற்றத்தில் வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுக்கிறார்.
கதைப்படி, தற்போது தனது மருமகள் வேலைப்பார்க்கும் எப்.எம்-ல் லெட்சுமியும் (தேவயானி) பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், அங்கே இருக்கும் சி.இ.ஓவால் தொடர்ந்து அவமானப்படுத்தபடுகிறார். இந்நிலையில், அந்த எப்.எம்மிற்கு சிறப்பு விருந்தினராக வரும் வனிதா விஜயகுமார், லெட்சுமி கேட்கும் கேள்விகளால் கோபமடைகிறார். இதனால் வனிதா எப் எம்மில் சண்டையிடுகிறார். வனிதாவின் ரியாக்ஷனால் சீரியல் படி அழுவது தான் தேவயானியின் கதாபாத்திரம் என்றால் இந்த காட்சியின் போது நிஜமாகவே அழுதுவிட்டாராம் தேவயானி.
|

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!