
சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்வேதா கெல்கே
ஸ்வேதா கெல்கே கலைஞர் டிவியில் புதிதாக உருவாகி வரும் "கண்ணெதிரே தோன்றினாள்" என்ற தொடரில் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் கேஜிஎப் நடிகை மாளவிகா, "எதிர்நீச்சல்" தொடரில் நடித்து வரும் அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. "கண்ணெதிரே தோன்றினாள்" வருகிற ஜூன் முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!