
இனியா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தீப்தி
மார் 25, 2024
Advertisement
சின்னத்திரை நடிகை தீப்தி கபில் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்திருந்தார். அதன்பின் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த புராஜெக்டிலும் கமிட்டாகாத அவர், தற்போது சூப்பர் ஹிட் தொடரான ‛இனியா" தொடரில் என்ட்ரி கொடுத்துள்ளார். அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இனியாவை போலீஸில் காட்டிக் கொடுக்கும் பெண்ணாக என்ட்ரி கொடுத்துள்ள தீப்தி, இனிவரும் எபிசோடுகளில் இனியாவிற்கு வில்லியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இனியா தொடரில் கமிட்டானதை ஆல்யாவுடன் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு தீப்தி உறுதிப்படுத்தியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!