
2026 வசூல் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்த பிளாஸ்ட்
சுமார் 15 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்படும் இப்படம் தற்போது 58 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் இந்த வருடத்தில் இதுவரையில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற படங்களின் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.
300 கோடியுடன் முதலிடத்தில் "கருப்பு", 100 கோடியுடன் இரண்டாமிடத்தில் "பராசக்தி", 80 பிளஸ் கோடியுடன் மூன்றாவது இடத்தில் "யூத்", 80 பிளஸ் கோடியுடன் நான்காமிடத்தில் "தாய் கிழவி", 66 கோடியுடன் ஐந்தாவது இடத்தில் "லவ் இன்ஷுரன்ஸ கம்பெனி" ஆகிய படங்கள் உள்ளன.
ஆனால், லாபம் தந்த படங்கள் என்று பார்த்தால் “கருப்பு, யூத், தாய் கிழவி” ஆகிய படங்களுக்குப் பிறகு 4வது இடத்தில் வந்துள்ளது "பிளாஸ்ட்".
இந்த வருடத்தில் அறிமுக இயக்குனர்கள் இயக்கிய "தாய் கிழவி, யூத், பிளாஸ்ட்” ஆகியவை 50 கோடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!