
தமிழ் சினிமா மிஸ் செய்த தேவதை ஷெரின்
மார் 17, 2023
பிக்பாஸ் பேரழகி ஷெரின் சிருங்கார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்திருக்க வேண்டியவர். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் பீல்ட் அவுட் ஆகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஷெரினை மீண்டும் ரசிகர்களுக்கு நினைவூட்டியது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4-ல் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். 37 வயதிலும் கட்டழகு குறையாத ஷெரின் இன்ஸ்டாகிராமில் தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 1.4 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஷெரினை பாலோ செய்து வருகின்றனர். கவர்ந்திழுக்கும் அழகினால் காண்பவர்களை கட்டிப்போடும் ஷெரின் அண்மையில் பாவாடை தாவணியில் வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் பார்ப்பவர்களை "துள்ளுவதோ இளமை" காலத்திற்கே கூட்டிச் செல்கிறது. தேவதையாகவே மாறிவிட்ட ஷெரினின் அந்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இப்படி ஒருதேவதையவா தமிழ் சினிமா இழந்துவிட்டது?
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!