
அழகே நக்ஷத்திரா....
ஆக 17, 2021
சின்னத்திரையில் மின்னும் பல நட்சத்திரங்களில் தனி அழகுடன் மின்னி கொண்டிருப்பவர் நக்ஷத்திரா நாகேஷ். தொகுப்பாளினி, கதாநாயகி என சின்னத்திரையின் அனைத்து பரிணாமங்களிலும் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நக்ஷத்திரா கலக்கான பல போட்டோஷூட்களையும் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது தனது அழகான புகைப்படங்களுக்கு காரணமான போட்டோகிராபாரை தனது ரசிகர்களுக்கு அறிமுக செய்து வைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களை நக்ஷத்திரா பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் தனது போட்டோகிராபரை "கேமரா செந்தில் மேஜிக்னா சும்மாவா?" என புகழ்ந்து பதிவிட்டுள்ளார். நக்ஷத்திராவின் இந்த போட்டோக்களை ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருதுடன் அழகே என வர்ணித்து கமெண்ட்டும் பதிவிட்டு வருகின்றனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!