
காதலியுடன் நடனமாடிய பப்லு ப்ருத்விராஜ்
செப் 07, 2023
Advertisement
பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான பப்லு என்கிற பிருத்விராஜ் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்தார். தற்போது பப்லுவுக்கு 57 வயதாகிறது. ஆனாலும் வொர்க்-அவுட், பாசிட்டிவான மனநிலை என உடலளவிலும், மனதளவிலும் கட்டுமஸ்த்தாக இளமையுடன் இருக்கிறார். இவருக்கு மலேசியாவை சேர்ந்த 24 வயதே ஆன ஷீத்தல் என்பவருடன் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் இவர்களது உறவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், சோஷியல் மீடியா பதிவுகளிலும், நேர்காணல்களிலும் தனக்கும் ஷீத்தலுக்குமான உறவு எத்தகையது என்பதை பப்லு விளக்கிவிட்டார். தற்போது ஷீத்தலுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வரும் பப்லு அவருடன் சேர்ந்து ரொமான்ட்டிக்காக நடனமாடி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‛காவாலா" பாடலுக்கு இருவரும் நடனம் ஆடி உள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!