
அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட்
பிப் 02, 2023
Advertisement
பிக்பாஸ் போட்டியாளரான மைனா நந்தினி, அசீமுக்கு சப்போர்ட்டாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் அசீமின் ரசிகர்களால் வைரல் செய்யப்படு வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இறுதிவரை இருந்த மைனா நந்தினி போட்டியில் நான்காம் இடத்தை பிடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் அசீம் குறித்து பேசிய அவர், "அசீமுக்குள் ஒரு சூப்பர் கேரக்டர் இருக்கு. கோபத்தில தான் அப்படி வார்த்தைகள் பேசுவானே தவிர மனசுல இருந்து வராது. கோபத்தில பேசினாலும், கோபம் தனிஞ்ச உடனே அவங்ககிட்டயே வந்து இயல்பா பேசிடுவான். அசீமுக்கு கோபத்து பிறகு ஒரு முகம் இருக்கு. அந்த அசீம் எனக்கு பிடிக்கும்" என ஆதரவாக பேசியுள்ளார். அசீமின் ரசிகர்கள் இதை கட் செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு அசீமின் புகழ் பாடி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!