மீண்டும் மாற்றம் ; ராசியில்லாத கேரக்டர் என ரசிகர்கள் கோபம்
நவ 24, 2022
"கயல்" தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், முத்துராமன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தவிரவும் முக்கிய கதாபாத்திரங்களின் ட்விஸ்ட் தொடரை விறுவிறுப்பாக எடுத்து செல்கிறது. அந்த வகையில் கதாநாயகி கயலின் தம்பி கதாபாத்திரமான அன்பு கதாபாத்திரம் தற்போது அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அன்பு கதாபாத்திரம் தற்போது நெகடிவ் ஷேடாக மாறிக்கொண்டியிருக்கும் சூழலில் கடந்த மாதம் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவினாஷ் திடீரென சீரியலை விட்டு விலகினார். அவரை தொடர்ந்து ஹரி என்பவர் அந்த ரோலில் நடித்து வந்தார். அவர் நடிக்க ஆரம்பித்து வெறும் ஒரு மாதமே ஆகியுள்ள நிலையில் அவரும் சமீபத்தில் கயல் தொடரைவிட்டு விலகுவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அன்பு கேரக்டரில் யூ-டியூபரான ஜீவா என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை பார்த்து கடுப்பான கயல் தொடரின் ரசிகர்கள் "ராசியில்லாத கயல் தம்பி" என டைரக்சன் டீமுக்கு ஐடியா கொடுத்து வருகின்றனர்.
"என்னடா இது கயல் சீரியலுக்கு வந்த சோதனை?"

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!