
அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம்
ஏப் 20, 2024
Advertisement
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்துள்ள தொடர் அன்பே வா. இதில் ஹீரோவாக நடித்து வருகிறார் விராட். இவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டான நவீனா என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், தற்போது மகாபலிபுரம் பீச் ரெசார்ட்டில் வைத்து கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்தில் சக சின்னத்திரை நடிகர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்களும் விராட்டுக்கு தங்கள் திருமணநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!