பாரதி கண்ணம்மா அகிலனின் நியூ போட்டோஷூட்
செப் 06, 2021
Advertisement
பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற அகிலன் சமீபத்தில் அந்த தொடரிலிருந்து விலகினார். சினிமாவில் நடிப்பதையே கனவாக கொண்ட அகிலன் மாடலிங் துறையில் நுழைந்து பின் சீரியலில் அறிமுகமானார். பாரதி கண்ணம்மா தொடரில் அவர் நடித்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல புகழை பெற்று தந்தது. இதன் மூலம் அகிலனுக்கு வெள்ளித்திரை கதவு திறந்தது. படங்களில் பிஸியாக நடித்து வரும் காரணத்தால் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகி விட்டார்.
அகிலன் தற்போது விஷாலின் "வீரமே வாகை சூடும்", "பீட்சா 3", "பகீரா" போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பல போட்டோஷுட்களை நடத்தில் இண்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த புகைப்படங்களை பார்த்து இவர் விஜய் தேவரகொண்டாவுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!