
நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் தான் : ஜெயலெட்சுமி பேட்டி
ஜன 20, 2024
Advertisement
சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெயலெட்சுமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறை சார்ந்த பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், "சமுதாயத்தில் நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் இருக்கிறது. ஒருமுறை வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி என்று எனக்கு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசுகையில் இரண்டு பெண்களின் படத்தை காட்டி பேரம் பேசினார்கள். ஆபாசமாக போட்டோ அனுப்பினால் 2 லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்கிற தவறான எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!