
சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா
ஜூன் 29, 2022
வெள்ளித்திரையின் லெஜண்ட்ரி நடிகையான அர்ச்சனா சின்னத்திரை சீரியலில் முதன் முதலாக என்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்துள்ள "ராதாம்மா குதுரு" தொடர் தமிழில் "மீனாட்சி பொண்ணுங்க" என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த புத்தம் புதிய மெகா தொடரின் டைட்டில் ரோலில் தான் அர்ச்சனா நடிக்க உள்ளார். இதன் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் யதார்த்த நடிகை என்று மிகவும் கொண்டாடப்பட்ட அர்ச்சனா, சீரியலில் என்ட்ரி கொடுத்திருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் அர்ச்சனாவுடன் காய்த்ரி யுவராஜ் மற்றும் ப்ரணிகா தக்ஷூ நடிக்கின்றனர். இந்த தொடர் ஏனைய விவரங்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளனர்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!